/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/165_105.jpg)
வேலூர் மாவட்டம் கந்தநேரியில் உள்ள அரசு மணல் கிடங்கில் இருக்கும் ஆற்று மணலை முறையாக ஆன்லைன் மூலம் பதிவு செய்து மணல் எடுக்க அனுமதிக்கப்பட்ட லாரிகளுக்கு 3 தினங்களுக்கு மேலாக மணல் கொடுக்காமல் காத்துக் கிடக்க வைத்துவிட்டு, மணல் எடுக்க பதிவு செய்யாத லாரிகளுக்கு இரவு பகலாக கள்ளத்தனமாக அரசு அதிகாரிகளின் துணையோடு, லோடு லோடாக மணல் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்து முறையாகப் பதிவு செய்த லாரிகளுக்கு மணல் வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பினர்வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனிடம் மனு அளித்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/993_322.jpg)
அதன் பின்னர் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தில் நிலவி வரும் ஆற்று மணல் தட்டுப்பாட்டை பயன்படுத்திக் கொண்டு வேலூர் கந்தனேரி மணல் குவாரியில் திமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவரும், ஒன்றிய கவுன்சிலரும் சேர்ந்து உள்ளூர் ரவுடிகளை வைத்துக் கொண்டும்அரசு அதிகாரிகளோடு கைகோர்த்துக் கொண்டும், ஆன்லைன் மூலம் பதிவு செய்த லாரிகள் வாரக்கணக்கில் நின்று கொண்டிருக்க, இரவு நேரங்களில் சட்ட விரோதமாக அனுமதி பெறாத லாரிகளில் டன் கணக்கில் மணல் கடத்துகிறார்கள்.
ஆகவே இதுபோன்றுஅநீதி இழைப்பதைதடுத்து நிறுத்தி, ஆன்லைன் மூலம் பதிவு செய்து மணல் எடுக்க காத்துக் கொண்டிருக்கும் லாரிகளுக்கு காவல்துறை முன்னிலையில் மணல் வழங்கிட வேண்டும். அதேபோன்று மணல் கடத்தலில் ஈடுபடும் உள்ளூர் குண்டர்களுக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். மணல் கிடங்கில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)