Published on 12/04/2020 | Edited on 12/04/2020
சென்னை துறைமுகத்தில் இருந்து மேடவாக்கத்திற்கு பாமாயில் ஏற்றி சென்ற டேங்கர் லாரி தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா மேம்பாலம் அருகே கவிழ்ந்தது.


ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி சாலையின் தடுப்பில் மோதி, எதிர்புறம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். லாரியில் இருந்த பாமாயில் சாலையில் கொட்டியது. தீ பற்றாமல் இருக்க தீயணைப்பு துறையினர் லாரி மீது தண்ணீர் மற்றும் நுரையை பீய்ச்சி அடித்தனர்.