/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a317.jpg)
திருவள்ளூர் அருகே ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற காரும் லாரியும் மோதி 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்துள்ள கனக்கமாசத்திரம் பகுதியில் ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி காரில் வந்த காரும் லாரியும் நேருக்கு நேர் மோதியது, காரில் இருந்த 7 பேரில் 2 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட நிலையில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள் நொறுங்கி இருந்த காருக்குள் சிக்கி இருந்தவர்களின் உடல்களை மீட்டனர்.
கடந்த ஒரு மணி நேரமாக அங்கு மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்களது உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தில் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி சீனிவாசபெருமாள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இந்த விபத்தால் அந்த பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)