/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a1592_0.jpg)
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி திண்டுக்கல்-வத்தலக்குண்டு தேசியநெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் இருந்து வத்தலக்குண்டு நோக்கிச் காதர் அலி என்பவர் நாகராஜ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது செம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி சரமாயன் அவரது மனைவி ரதி உடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
வத்தலக்குண்டுவில் காய்கறிகளை இறக்கிவிட்டு திண்டுக்கல் நோக்கி வந்த லாரி இரண்டு இருசக்கர வாகனத்தின் மீதும்மோதியது. இதில் காதர் அலி, நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட சரமாயன், ரதி ஆகியோர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் சிகிச்சை பலனின்றி விவசாயி சரமாயன் உயிரிழந்துள்ளார். இதனால் இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து ரதி என்ற அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திற்கு வந்த ஒட்டன்சத்திரம் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)