thoppur

தர்மபுரி அருகே, 15 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட பயங்கர விபத்தில், 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரியால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

Advertisment

கண்டெய்னர் லாரி பலமாக மோதியதில் ஒவ்வொரு வாகனமும் அதற்கு முன்னால் சென்ற மற்ற வாகனங்களின் மீது தாறுமாறாக மோதி பெரும் விபத்து உண்டானது. மொத்தம் 12 கார்கள், 2 டாரஸ் லாரிகள், ஒரு வேன் என மொத்தம் 15 வாகனங்கள் ஒன்றின் மீது ஒன்றாக ஏறிக்கொண்டு நின்றன. சில கார்கள் அப்பளம்போல் நொறுங்கின.

thoppur

Advertisment

இந்தப் பயங்கர விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த ஒருவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவப்பரிசோதனையில், அந்த நபர் வரும் வழியிலேயே இறந்துவிட்டது தெரியவந்தது. இந்த விபத்தில் மொத்தம் நான்கு பேர் இறந்துள்ளனர். இறந்த நபர்கள் யார் யார் என்பது குறித்த விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. பலியான நால்வரும் ஆண்கள்.

thoppur

இந்நிலையில், தற்பொழுது இந்த விபத்து தொடர்பான பதறவைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. மின்னல் வேகத்தில் வரும் லாரியானது, சாலையில் வரிசையாக நின்று கொண்டிருக்கும் கார்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி நிற்கிறது.விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்தி விட்டுத் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் நிலையில், அவரை பிடிக்கவும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கும்என்பதற்காகவே சாலை விரிவாக்கப் பணிகள் ஒருபுறம்நடந்து கொண்டிருக்கிறது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், அதிகம்விபத்து நடக்கின்ற இந்தத் தட்டமடவு பகுதியிலிருந்து தொப்பூர் பேருந்து நிறுத்தம் வரை ஒரு உயர்மட்டப் பாலம் அமைத்தால் விபத்துகள் ஏற்படுவதை தடுக்கலாம் எனக் கோரிக்கை வைத்து அதற்கான கோப்புகள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.