Truck collides with car accident

சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பயணித்த இந்த கார், இன்று அதிகாலை கடலூர் மாவட்டம் சிதம்பரம் பு.முட்லூர் ஆணையாங்குப்பம் வழியே சென்று கொண்டிருந்த போது, சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஒன்று, கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இந்த விபத்து ஆனது.

Advertisment

இந்த விபத்தில், காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் உடல்நசுங்கி, பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment