Truck carrying eggs overturns

முட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நாமக்கல் மாவட்டத்தில் இருந்து சுமார் 50 ஆயிரம் முட்டைகளை ஏற்றிக் கொண்டு மினி லாரி ஒன்று ஆற்காடு நோக்கிச் சென்று கொண்டிருந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாக துருவம் அருகே சென்றுகொண்டிருந்த மினி லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துவிபத்துக்குள்ளானது. இதில், சுமார் 2.5 லட்சம் மதிப்பிலான முட்டைகள் நொறுங்கியது.

Advertisment

இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், பொக்லைன் இயந்திரம் மூலம் லாரியை மீட்டு போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment