Advertisment

சிமெண்ட் கற்கள் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்து;  3 பேர் உயிரிழப்பு

A truck carrying cement stones overturned in an accident;  3 people lost their lives

Advertisment

கிருஷ்ணகிரியில் சிமெண்ட் கற்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில் லாரியின் மேல் அமர்ந்தபடி ஆபத்தாக பயணித்த மூன்று தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் இருந்து சிமெண்ட் கற்கள் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது குந்துக்கோட்டை பகுதி அருகே லாரி வந்து கொண்டிருந்தது. அப்பொழுது வளைவில் திரும்பும் பொழுது லாரி எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது, இதில் லாரியின் மீது அமர்ந்து பயணம் செய்த கணவன், மனைவி, வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி என மூன்று பேர் சம்பவ இடத்திலேயே சிமெண்ட் கற்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். அதேபோல் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் லாரி மீது மோதியதில் படுகாயம் அடைந்தனர். கார் ஒன்றும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குந்துக்கோட்டை பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

Krishnagiri lorry
இதையும் படியுங்கள்
Subscribe