லாரி - கார் நேருக்கு நேர் மோதி விபத்து: 6 பேர் பலியான சோகம்

Truck Car headon collision; Tragedy that 6 people issue

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சிங்கிலிப்பட்டியில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. காரில் பயணம் செய்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலியான 6 பேரும் புளியங்குடியை சேர்ந்தவர்கள் என்றும் குற்றாலத்தில் குளித்து விட்டு சொந்த ஊர் திரும்பிக் கொண்டு இருந்த இந்த விபத்து நேரிட்டதாகவும் முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விபத்து காரணமாக தென்காசி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போக்குவரத்தை சீர் செய்தனர். மீட்பு பணிகள் முடிந்த நிலையில், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

car lorry police Tenkasi
இதையும் படியுங்கள்
Subscribe