/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/erode district_0.jpg)
சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
திருச்செங்கோட்டைச் சேர்ந்த கந்தசாமி, அவரது மனைவி தங்கமணி, மகன் பிரனீத் ஆகியோர் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க ஈரோடு மாவட்டம், ஆனைக்கல் பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். ஆனைக்கல் பாளையம் ரிங்ரோடு வழியே சென்றபோது வாகனப் போக்குவரத்து அதிகம் இருந்துள்ளது. அப்போது முன்னால் சென்ற சாரை முந்த முயன்றபோது எதிரே வந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியுள்ளது.
இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்து மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து ஈரோடு தாலுக்கா காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow Us