அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ராயம்புரம் காலனி தெருவை சேர்ந்தவர் தனவேல் மகன் சரத்குமார் (வயது 23). இவர் ராயம்புரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் தனது செல்போன் நம்பரை கொடுத்து மாலை எட்டு மணிக்குள் எனக்கு போன் செய்து பேச வேண்டும். அதனைதொடர்ந்து தன்னை காதலிக்க வேண்டும் என்று மிரட்டியதோடு இதனை வீட்டில் யாரிடமும் சொல்லக்கூடாது என்றும், மீறி எனக்கு போன் செய்யாமல் வீட்டாரிடம் கூறினால் உனது வீட்டுக்கு வந்து காலி செய்து விடுவேன் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cell phone 91.jpg)
பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற அந்த மாணவி அழுது கொண்டு இருந்துள்ளார். இதனை கண்ட பக்கத்து வீட்டுப் பெண் ஒருவர் கேட்டபோது, மேற்கண்ட விவரங்களை கூறினார். உடனடியாக அவர் அந்த மாணவியின் பெற்றோரிடம் இந்த தகவலை தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து மாணவியின் தந்தை செந்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு சரத்குமாரை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
.
Follow Us