Advertisment

மெரினாவில் முப்படை வீரர்கள் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை..! (படங்கள்)

சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

Advertisment

இந்தியா முழுவதும் வரும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட இருக்கிறது. வருடாவருடம் குடியரசு தினத்தன்று மெரினா கடற்கரையில் முப்படையினரின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கும். அதேபோல் இந்த ஆண்டும் முப்படையினரின் அணிவகுப்பு நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், குடியரசு தினத்தன்று நடைபெறும் முப்படை வீரர்களின் அணிவகுப்புக்கான ஒத்திகை இன்று (20.01.2021) நடைபெற்றது.

மெரினாவில் அமைந்திருக்கும் காந்தி சிலை அருகே, ஆளுநர் மற்றும் முதலமைச்சர் வாகன ஒத்திகை நடைபெற்றது. பின்னர், தேசியகீதம் ஒலிக்கப்பட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்துமுப்படை வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர். முதற்கட்ட ஒத்திகை நடந்து முடிந்த நிலையில், நாளை மறுநாள் (22 ஜன.) மற்றும் 24ஆம் தேதிகளில் 2வது மற்றும் 3வது ஒத்திகை நடக்கவிருக்கிறது. ஒத்திகை நடக்கும் நேரத்தில் காமராஜர் சாலையில் செல்லும்வாகனங்கள், மாற்று பாதையில் இயக்கப்பட்டன.

republic day merina
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe