Advertisment

த்ரிஷாவுக்காக துப்பாக்கி தூக்கிய நடிகர்கள்! -ஒரு  ‘அடடே’ மீம்ஸ்!

trisha

சினிமாக்களில் எதிர்பாராத ட்விஸ்ட் தரும் இயக்குநர்களின் திறமை ‘ஓஹோ’ என மெச்சப்படுகிறது என்றால், சினிமாக்களை வைத்துக் கதை பின்னும் மீம்ஸ் க்ரியேட்டர்களின் கற்பனை ‘ஆஹா’ என்று சிலாகிக்க வைக்கிறது.

Advertisment

த்ரிஷா மற்றும் விஜய்சேதுபதி நடித்த மூன்று படங்களின் காட்சியைத் தொடர்புபடுத்தி, ரஜினி மற்றும் சிம்புவை வைத்து, ஜோராக ஒரு கதையே பண்ணியிருக்கிறார்கள் ‘பேந்தர்ஸ்’ என்ற பெயரில் செயல்படும் மீம்ஸ் க்ரியேட்டர்கள். இதற்காக அவர்கள் எடுத்துக்கொண்ட சினிமாக்களின் எண்ணிக்கை நான்கு.

Advertisment

விண்ணைத்தாண்டி வருவாயா-வில் த்ரிஷாவைக் காதலிப்பார் சிம்பு. அதனால் ‘கான்ட்’ ஆன விஜய்சேதுபதி, செக்கச்சிவந்த வானத்தில் சிம்புவைச் சுட்டுக் கொன்றுவிடுவார். காதலன் சிம்பு இறந்துவிட, விஜய்சேதுபதிக்கு ‘லைன் க்ளியர்’ ஆகிவிடுகிறது. பிறகென்ன? 96-ல் த்ரிஷாவை விழுந்து விழுந்து காதலிப்பார். இங்கேதான் ரஜினியின் ட்விஸ்ட் வருகிறது. தனக்கு மனைவியாகிவிட்ட த்ரிஷாவுக்காக, பேட்டயில் விஜயசேதுபதியைச் சுட்டுக் கொல்கிறார். இதுதான், ஒரே மீம்ஸில் எட்டு காட்சிகள் மூலம் சொல்லப்பட்ட கதை.

அப்பாடா, த்ரிஷா கேரக்டரை பேட்டயில் சாகடித்து விட்டனர். இனி அவரை இன்னொரு நடிகருடன் ‘கனெக்ட்’ பண்ணி மீம்ஸ் போட முடியாது.

ஜெகஜ்ஜால கில்லாடிங்க.. மீம்ஸ் க்ரியேட்டர்ஸ்ன்னா சும்மாவா?

meme
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe