Advertisment

முன்பகையால் நிகழ்ந்த கோரம்.... சிக்கிய குற்றவாளிகள்...

திருவல்லிகேணி மாட்டாங்குப்பம் பகுதியை சேர்ந்த அறிவழகன் தொடர் குற்ற வழக்குகளில் கைதாகி சிறைக்கு சென்றுள்ளார். இவர் மீது ஏற்கனவே D5 மெரினா காவல்நிலையத்தில் சட்டப்பிரிவு 307,349, 321 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பதியப்பட்ட குற்ற வழக்கில் சிறை சென்றுள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியில் வந்த அறிவழகனை, கடந்த வாரம் அவர் வீட்டில் இரவு உணவு உட்கொண்டிருந்தபோது வினோத்,பாலாஜி ஜூலி சுரேஸ், ஷிரிநாத் ஆகியோர் கத்தியால் சராமாரியாக வெட்டி உள்ளனர்.

Advertisment

triplicane issue update

இந்த சம்பவம் முன் விரோத காரணத்தால் வெட்டியுள்ளார்கள். அதே மாட்டாங்குப்பம் பிரபல ரவுடியான பல்புகுமாருக்கும், சொரி விஜய்க்கும் ஏற்கனவே பிரச்சனை ஏற்கப்பட்டு வந்துள்ளது. இந்த காரணத்தால். சொரிவிஜயை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் சொரிவிஜய் தம்பியான அறிவழகனுக்கு தெரிய வர, பல்புகுமாரை ஐஸ்அவுஸ் பகுதியில் வைத்து கல்லால் அடித்து கொலை செய்தார். இந்த கொலையில். சிறை சென்ற அறிவழகன் மற்றும் அண்ணன் சொரிவிஜயும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அறிவழகன் மட்டும் முதலில் ஜாமீனில் வெளி வந்து பிறகு அண்ணையும் ஜாமீனில் எடுக்க முடிவு செய்திருந்த நிலையில் தான், பல்புகுமாரனின் கூட்டாளியான வினோத்,பாலாஜி, ஜூலி சுரேஸ், ஸ்ரீகாந்த் ஆகியோர் அறிவழகனை கத்தியால் தலையை வெட்டி மூளையை தட்டில் வைத்து விட்டு சென்றனர். இது தொடர்பாக D6 அண்ணாசதுக்கம் காவல் நிலையம் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்தநிலையில், இன்று குற்றவாளிகள் 4 பேரும் திருச்சியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களை அண்ணாசதுக்கம் காவல்நிலையத்திற்கு கொண்டுவரநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Chennai trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe