இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் நிகழ்ச்சி டெல்லியில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன், செங்கோட்டையன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் சென்றனர்.

Advertisment

Edappadi K. Palaniswami

அதேபோல் பாஜக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், தேமுதிகவின் சுதீஷ் ஆகியோரும் இந்த விழாவில் பங்கேற்க விமானம் மூலம் டெல்லி சென்றனர். இவர்கள் அனைவரும் ஒரே விமானத்தில் டெல்லி சென்றது குறிப்பிடத்தக்கது.

டெல்லி சென்ற எடப்பாடி கே.பழனிசாமியை, புதுடில்லிக்கான தமிழ்நாடு அரசின் பிரதிநிதி, முன்னாள் மக்களவை துணைத்தலைவர் மற்றும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆகியோர் மலர்கொத்து வழங்கி வரவேற்றனர்.