Trichy,Thanjavur, Ariyalur - corona Recovering

திருச்சி, தஞ்சை, அரியலூரில் மட்டும் ஒரே நாளில் 167 பேர் குணமடைந்தனர், இதைத்தொடர்ந்து அவர்கள்வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனோ வார்டில், திருச்சி மட்டும் இல்லாது பிற மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Advertisment

Advertisment

இந்த நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த சிறுமி ஒருவர் குணமடைந்ததால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது கரோனோ வார்டில் திருச்சி மாநகர் 1, திருச்சி மாவட்டத்தில் 9, பெரம்பலூர் 24, அரியலூர் 5, புதுகை 1 என மொத்தம் 40 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் 70 பேருக்கு கரோனோ வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. குணமான 48 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதையெடுத்து 22 பேர் மட்டும் கரோனோ வார்டில் சிகிச்சையில் இருக்கிறார்கள். இந்த நிலையில் 6 பேர் குணமாகி வீடு திரும்பினர்.

அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 30 பேர், முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்ட 130 பேர் என 160 பேர் ஒரே நாளில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.