Trichy youth passes away Excitement with the word in the tribute poster ..!

Advertisment

திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சின்ராஜ் (21). இவருக்கும் பொன்மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று (16.09.2021), பொன்மலைப்பட்டி கடை வீதி பகுதியில் சின்ராஜ் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, ஓட ஓட வெட்டி, தலை துண்டித்துப் படுகொலை செய்யப்பட்டார். இதனைக் கண்டு கடை வீதியில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

பிறகு தகவலறிந்து அங்கு வந்த பொன்மலை காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பொன்மலை பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் (24) என்பவருக்கும் சின்ராஜுக்கும் இடையே இருந்துவந்த முன்விரோதத்தால் வெட்டிக் கொன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Trichy youth passes away Excitement with the word in the tribute poster ..!

Advertisment

இந்நிலையில், இறந்துபோன சின்ராஜுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அப்பகுதியில் ஒட்டப்பட்டிருந்தது.அப்போஸ்டரில் இறுதி வரியில் ‘விரைவில்’ என்ற வார்த்தை இடம் பெற்றிருந்தது.அந்த வார்த்தைக் குறித்து அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.