Advertisment

அறிவாலயம் வந்த திருச்சி வெற்றியாளர்கள்! 

Trichy winners who came to Arivalayam!

தமிழ்நாடு நகர்ப்புறத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. அன்று பதிவான வாக்குகள் கடந்த 22ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. அதேபோல், 138 நகராட்சிகளில் 132 நகராட்சிகளையும், 489 பேரூராட்சிகளில் 435 பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. வெற்றி பெற்றவர்கள் அனைவரும் வரும் மார்ச் மாதம் 2ஆம் தேதி பதவியேற்கவுள்ளனர்.

Advertisment

இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நேற்று முதல் திமுக தலைமை அலுவலகமான சென்னையில் உள்ள அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுவருகின்றனர். அந்தவகையில், திருச்சி மாவட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இன்று சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற உள்ளனர்.

Advertisment

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe