Advertisment

'ஸ்டாலின் நினைப்பதை செய்து முடிக்கும் முதல் மாவட்டமாக திருச்சி இருக்கும்'- அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

dmk

Advertisment

திமுக திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ளஅலுவலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், ''திமுக திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறைஆகிய3 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும்.

கிராமப்புறத்தில்வேட்பாளர் பெயர்களை சுவர் விளம்பரம் செய்ய வேண்டும்.திமுக தலைவர் ஸ்டாலின் கூறியது போல் தமிழ்நாட்டில் 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.தேர்தலில் போட்டியிடுவது கலைஞர்தான், போட்டியிடுவது உதயசூரியன் சின்னம்தான் என்கிற சிந்தனையோடு நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும்.

ஸ்டாலின் 50 ஆண்டுகால பொதுவாழ்விற்கு சொந்தக்காரர். அவர் தமிழகத்திற்கு என்ன செய்ய நினைக்கின்றாரோ? அதை செய்து முடிக்கின்ற முதல் மாவட்டமாக திருச்சி தெற்கு மாவட்டம் இருக்கும். அதேபோல் தேர்தலுக்கு குறைந்தபட்ச நாட்கள் மட்டுமே உள்ளது. எனவே திமுகவினர் கடுமையாக உழைக்க வேண்டும்''என்றார்.

Advertisment

இந்தக் கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், வண்ணை அரங்கநாதன், கவிஞர் சல்மா, கோவிந்தராஜ், செந்தில் மற்றும் ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், ஒன்றிய குழு துணை தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

stalin thiruchy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe