Advertisment

புகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்!

trichy vaiyampatti - police

திருச்சிவையம்பட்டி காவல்நிலையத்தில் தொடர்ச்சியாக ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. பிரச்சனையின் அடிப்படையில் போலிசாருக்கு ஏதாவது ஒரு சிக்கல் வந்துகொண்டே இருக்கிறது. இதனால் தினமும் இந்தக் காவல்நிலையத்தின் பெயர் சர்ச்சையில் சிக்குகிறது.

Advertisment

திருச்சி வையம்பட்டியைச் சேர்ந்த ஒரு பெண் 6 மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையில் வையம்பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறார். அந்தப் புகாரை தீபன்குமார் என்கிற போலிஸ்காரர் விசாரிக்கிறார்.

Advertisment

இந்தப் புகார் தொடர்பாக அடிக்கடி விசாரணை நடத்தியதில் அந்தப் பெண்ணுக்கும், விசாரித்த போலீஸ் தீபன்குமாருக்கும் நெருக்கம் அதிகரிக்கிறது. இந்த நெருக்கத்தின் அடிப்படையில் அந்தப் பெண் கணவனை விட்டுப் பிரிந்து வையம்பட்டியில் தனிவீடு எடுத்து போலீஸ் தீபன்குமாருடன் குடும்பம் நடத்துகிறார்.

இந்த விசயம் அந்தப் பெண்ணின் கணவனுக்குத் தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்தார். தீபன்குமாரிடம் இருந்து எனக்கு மனைவியை மீட்டுத் தாருங்கள் என்று வையம்பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறார் மனைவியைப் பறி கொடுத்த கணவன்.

கணவன் கொடுத்த புகாரை வையம்பட்டி எஸ்.ஐ. கலைச்செல்வன் விசாரிக்கிறார். கொடுக்கப்பட்ட புகாரில் அடிப்படை முகாந்தரம் இருப்பதால் போலீஸ் தீபன்குமார் முதல்கட்டமாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

http://onelink.to/nknapp

விசாரணையின் அடிப்படையில் புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் குடும்பம் நடத்திய விவகாரம் உண்மை என்றதும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட தீபன்குமாரை சஸ்பெண்ட் செய்து உத்தவிட்டார் திருச்சி மாவட்ட எஸ்.பி. ஜியாஉல்ஹக்.

police suspend trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe