Skip to main content

கட்டுமான பொருட்கள் திருட்டு - ஒருவர் கைது; மற்றொருவருக்கு போலீசார் வலைவீச்சு

 

trichy uraiyur construction instruments incident 

 

திருச்சி மாவட்டம்  உறையூர் எடத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல் (வயது 52). இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று உள்ளார். பின்னர் நேற்று வீட்டுக்கு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைத்து இருந்த கட்டிங் மெஷின், டிரில்லிங் மெஷின் உள்ளிட்ட பொருட்கள் திருடு போயிருந்தது.

 

இதுகுறித்து பழனிவேல் உறையூர் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மோகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். இந்நிலையில், இது தொடர்பாக திருச்சி உறையூர் பாண்டமங்கலத்தை சேர்ந்த தீபன்ராஜ் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து திருடப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த முகம்மது இப்ராஹிம் ஷா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !