trichy two wheeler lift woman incident 

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள ரெட்டிமாங்குடியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 46). இவர் நேற்று முன்தினம் மதியம் ரெட்டி மாங்குடியில் இருந்து சிறுகனூருக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் உள்ள பெருமாள் கோவில் அருகே நின்ற 42 வயதுடைய ஒரு பெண், மோட்டார் சைக்கிளில் வந்த சுரேஷிடம் ‘லிப்ட்’ கேட்டுள்ளார்.

Advertisment

இதையடுத்து அந்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சுரேஷ் சிறுகனூர் நோக்கி சென்று உள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்ற போது திடீரென மோட்டார் சைக்கிளை நிறுத்திய சுரேஷ், அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் இது பற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிய சுரேஷ், மீண்டும் அந்த பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வந்து சிறுகனூர் பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண் சிறுகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மதுபான கூடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த சுரேசை பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை லால்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின்படி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisment

மேலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறப்படும் பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதற்கிடையே அந்த பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவரது 2வது கணவருடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து, ரெட்டி மாங்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து 3 நாட்களாக தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ‘லிப்ட்’ கேட்டு சென்ற பெண் பாலியல் கொடுமைசெய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.