Advertisment

போதையில் தகராறு செய்த தந்தை; தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி

trichy thuraiyur husband and wife issue son involved

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த விசுவாம்பாள் சமுத்திரம் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் புகழேந்தி. இவருக்கு சுஜாதா என்ற மனைவியும், சுரேந்தர் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். புகழேந்தி கூலி வேலை செய்து வந்தார். வழக்கம்போல நேற்று கூலி வேலைக்குச் சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த தனது மனைவி சுஜாதாவிடம் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

Advertisment

அப்போது ஊரில் நடைபெறும் திருவிழாவிற்காக சேலத்தில் இருந்து சுரேந்தர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்துள்ளார்.தந்தை தினமும்குடித்துவிட்டு வீட்டில் தாயிடம் சண்டையிடுவதைக் கண்டு, நேற்று வீட்டில் இருந்த மகன் சுரேந்தர் தந்தையிடம் ஏன் குடித்துவிட்டு தினமும் தகராறு செய்கிறீர்கள் எனத்திட்டியுள்ளார். இதனால் தந்தை மற்றும் மகன் இடையே தகராறு முற்றியுள்ளது. இதற்கிடையில் உள்ளூரில் திருமணம் செய்து கொடுத்துள்ள மகளை அழைத்து வர சுஜாதா சென்று மகளை அழைத்து வந்தார். அப்போது தனது கணவன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக்கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

Advertisment

இந்நிலையில்,அம்மிக் கல்லால் அடித்தும், கத்தியால் குத்தியும் புகழேந்தி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது பற்றி தகவல் அறிந்த உப்பிலியாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சுரேந்தரை கைது செய்தனர். மேலும் இறந்து போன புகழேந்தியின் உடலை மீட்ட போலீசார் உடற்கூறு ஆய்விற்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடிபோதையில் தகராறு செய்த தந்தையை பெற்ற மகனே கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

function Salem police trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe