படிக்காமல் டிவி பார்த்ததால் ஆத்திரத்தில் சிறுமியை அடித்து கொன்ற சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை அடித்தது அம்மாவா, வளர்ப்பு அப்பாவா என்று விசாரணை நடந்து வருகிறது.
திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த காட்டுப்புத்தூரை சேர்ந்தவர் பாண்டியன். இவருடைய மனைவி நித்யகமலா, மகள் லத்திகாஸ்ரீ (வயது 5). இவர்கள் கடந்த 5 நாட்களுக்கு முன்பே காட்டுப்புத்தூருக்கு புதிதாக குடி வந்தனர். பாண்டியன் ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறேன் என்று சொல்லி வாடகைக்கு வந்திருக்கிறார்.
இந்நிலையில் வீட்டில் இருந்த லத்திகாஸ்ரீயை, நித்யகமலா அடித்ததாக கூறப்படுகிறது. இதில் லத்திகாஸ்ரீயின் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.
இதையடுத்து அவளை சிகிச்சைக்காக காட்டுப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பெற்றோர் கொண்டு சென்றனர். அங்கிருந்து நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு லத்திகாஸ்ரீ அனுப்பி வைக்கப்பட்டாள். அவளுடைய உடல்நிலை மோசமானதால், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே லத்திகாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தாள்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
காட்டுபுத்தூர் போலிசாரின் முதல் கட்ட விசாரணையில், லத்திகாஸ்ரீ ஒரு பள்ளியில் எல்.கே.ஜி. படித்ததும், அவள் டி.வி. பார்த்துக்கொண்டு சரியாக பாடம் படிப்பதில்லை என திட்டி, நித்யகமலா சரமாரியாக அடித்திருக்கிறார் என்று அக்கம் பக்கத்தில் விசாரணையில் தெரிந்து இருக்கிறது.
இந்த நிலையில் நித்தியகமலாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் எனக்கு பிரசன்னா என்பவரோடு திருமணம் ஆனது. லத்திகாஸ்ரீ பிறந்தாள். அவருடன் எனக்கு விவகாரத்து ஏற்பட்டு தற்போது பண்டியன் என்பவரோடு இருக்கிறேன். அவர் தான் நான் இல்லாத நேரத்தில் சரியாக படிப்பதில்லை டிவி பார்கிறாய் என்று சொல்லி என் மகளை அடித்துக்கொன்று விட்டார் என்று வாக்குமூலம் கொடுத்து விட்டு குழந்தையின் உடலை வாங்க சேலம் அரசு மருத்துவமனை சென்றிருக்கிறார். இதற்கிடையில் பாண்டியன் தற்போது தலைமறைவாக இருக்கிறார். குழந்தை அடித்து கொன்ற செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.