Advertisment

ஆன்லைன் ரம்மியால் விபரீத முடிவெடுத்த வாலிபர்; திருச்சியில் சோகம் 

trichy thiruverumbur youngster online game issue police investigation started 

Advertisment

திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை குடியிருப்பு 8வது தெருவைச் சேர்ந்தவர் ரவிசங்கர் (வயது 42). இவர் துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையில் அட்டெண்டராக வேலை பார்த்து வந்தார். மேலும் ரவிசங்கர் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். இதனால் கடன் அளவுக்கு அதிகமானதால் இரண்டு நாட்களாக வேலைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நேற்று இரவு வீட்டில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று வழக்கம் போல் காலை ரவிசங்கர் மனைவி ராஜலட்சுமி ரவிசங்கரை எழுப்பிய பொழுது அவர் எழுந்திருக்கவில்லை. அதனைத்தொடர்ந்து உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரவி சங்கரை மீட்டு துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு ரவிசங்கரை பரிசோதித்த மருத்துவர்கள் ரவிசங்கர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

சம்பவம் குறித்து ராஜலட்சுமி நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவிசங்கர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்து போன ரவிசங்கருக்கு ஆறு வயதில் ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

hospital trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe