trichy thiruverumbur mother in law and son in law incident

Advertisment

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியைசேர்ந்தவர் செல்வராஜ்(வயது 27). இவரதுமனைவி சந்தியா (வயது 22) (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர்களுக்குகடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் செல்வராஜ்திருமணத்திற்கு பிறகு தனது மாமியார் வீட்டிலேயே மனைவியுடன் வசித்து வந்துள்ளார். மதுவுக்கு அடிமையான இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து வீட்டில் இருக்கும் தனது மாமியாருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மனைவி சந்தியாவும் தனது கணவரின் செயலை கண்டித்தும் வந்துள்ளார்.

இருப்பினும் கடந்த 5 ஆம்தேதி மது அருந்திவிட்டு போதையில் வீட்டுக்கு வந்த செல்வராஜ்தனது மாமியாருக்குபாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாமியார் தனது மகளான சந்தியாவுடன் சேர்ந்து கொதிக்கும் வெந்நீரில்மிளகாய்பொடியைக் கலந்து செல்வராஜ்மீது ஊற்றி உள்ளனர்.இதனால் வலியும்எரிச்சலும் தாங்க முடியாத செல்வராஜ்அலறியடித்துக் கூச்சலிட்டுள்ளார். இவரின் அலறல் சத்தம்கேட்டுஓடி வந்த அக்கம்பக்கத்தினர் செல்வராஜை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனை தீக்காயப் பிரிவில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்துதிருவெறும்பூர் போலீசார் செல்வராஜின்மாமியார் மற்றும் மனைவி சந்தியா இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.