ADVERTISEMENT

திருச்சியில் சுதந்திர போராட்ட தியாகி குடும்பத்தின் வாக்குரிமையை நீக்கிய அதிகாரிகள் ! 

10:46 PM Apr 18, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

திருச்சி திருவரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொன்மலைபட்டியில் 36 வார்டை சேர்ந்தவர் செபஸ்தியம்மான். வயது 93 இவர் இன்று காலை ஓட்டு போடுவதற்காக பூத்துக்கு சென்ற போது இவருடைய பெயர் இல்லாததை பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

ADVERTISEMENT

இவர் அந்த பூத் ஏஜெண்டிடம் என்னோட கணவர் சந்தியாகு நேதாஜி படையில் இணைந்து இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர். அவருடைய படையில் இருந்தவர். சுதந்திரம் அடைந்த பிறகு தமிழக காவல்துறையில் பணிபுரிந்து ஒய்வு பெற்று இறந்து போனார். என்னோடுடைய கணவரின் பென்ஷனை நான் வாங்கி வருகிறேன்.

என்னுடைய வீடு எதுவும் மாறவில்லை. கடந்த முறை ஓட்டு பதிவு செய்தேன். ஆனால் இந்த முறை என்னுடைய ஓட்டு இல்லை என்கிறார்கள். இது வரை ஒட்டு போடாமல் இருந்தது இல்லை. ஆனால் இந்த முறை இந்த அதிகாரிகள் என்னுடைய ஓட்டை நீக்கிவிட்டார் எப்படி நீக்கினார்கள். சுதந்திர போராட்ட தியாகியின் மனைவியோட ஓட்டை நீக்கினால் எப்படி? என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இவரிடம் ஆதார்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேசன்கார்டு, எல்லாம் இருந்தும் வாக்குரிமை பறிக்கப்பட்டது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த எம்.பி. தேர்தலில் தமிழகம் முழுவதும் எந்த முறையும் இல்லாமல் இந்த முறை நிறைய பொதுமக்களின் ஓட்டுகள் எல்லாம் நீக்கப்பட்டு இருக்கிறது குறிப்பிடதக்கது. தங்களுக்கு எப்படி ஓட்டு இல்லாமல் போனது என்று அதிகாரிகளிடம் முறையிட்டு எந்த பதிலும் கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT