Advertisment

அதிகமான மாத்திரைகளை விழுங்கிய முதியவருக்கு நேர்ந்த சோகம்

trichy thiruvanaikaval senior citizen overdose tablet incident

Advertisment

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பர்மா காலனியைச் சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 72). வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட இவர் அதற்கு மருந்து மாத்திரைகள் எடுத்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று தியாகராஜன் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை விழுங்கியுள்ளார். இதனால் உடனே மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், திருச்சியில்மேலும் ஒரு சம்பவமாக, திருச்சி எடத்தெரு ரோடு பிள்ளை மாநகரை சேர்ந்தவர் சுரேஷ் கொத்தனார். இவரது மகன் நெல்ராஜ் (வயது 19). இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதை அவரது தந்தை சுரேஷ் கண்டித்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த நெல்ராஜ் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு தீவிர சிகிச்சை அளித்தும்நெல்ராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோனியா காந்தி வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.

hospital tablet trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe