Skip to main content

அதிகமான மாத்திரைகளை விழுங்கிய முதியவருக்கு நேர்ந்த சோகம்

Published on 28/03/2023 | Edited on 28/03/2023

 

trichy thiruvanaikaval senior citizen overdose tablet incident

 

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பர்மா காலனியைச் சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 72). வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட இவர் அதற்கு மருந்து மாத்திரைகள் எடுத்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று தியாகராஜன் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை விழுங்கியுள்ளார். இதனால் உடனே மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.

 

இந்நிலையில், திருச்சியில் மேலும் ஒரு சம்பவமாக, திருச்சி எடத்தெரு ரோடு பிள்ளை மாநகரை சேர்ந்தவர் சுரேஷ் கொத்தனார். இவரது மகன் நெல்ராஜ் (வயது 19). இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதை அவரது தந்தை சுரேஷ் கண்டித்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த நெல்ராஜ் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் நெல்ராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோனியா காந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

திருச்சியில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Enthusiastic reception for Edappadi Palaniswami in Trichy

தமிழக முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக பொதுச்செயலாளர், எடப்பாடி பழனிசாமி தஞ்சை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி வந்தடைந்த அவருக்கு திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் அதிமுகவினர் செண்டை மேள தாளங்கள் முழங்க, உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இதில், அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் எம்பி குமார், புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுயுர மலர் மாலை அணிவித்தும், பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும், புத்தகங்கள் வழங்கியும சிறப்பான வரவேற்பு அளித்தனர்.  

முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வளர்மதி, சிவபதி, அமைப்புச் செயலாளர் ரத்னவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் எம்.பி.கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து. சாலை வழிப் பயணமாக புறப்பட்டுச் சென்ற எடப்பாடி.பழனிசாமிக்கு, தஞ்சை மத்திய மாவட்டம் சார்பில் வல்லம் பிரிவு சாலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தஞ்சை மாவட்டத்தில் மன்னார்குடி ஒன்றிய பெருந்தலைவர் மனோகரன் இல்ல திருமண நிகழ்வில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெறும் முன்னாள் அமைச்சர் ஜெயபால் இல்ல வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் பல்வேறு கட்சிகளில் இருந்து வந்த நிர்வாகிகள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் இன்று மாலை மீண்டும் திருச்சி விமான நிலையம் வநதடைந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

Next Story

ஒரே நேரத்தில் 50 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் விசாரணை

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
Bomb threat to 50 hospitals simultaneously; Police investigation

மும்பையில் 50 மருத்துவமனைகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏற்கனவே இந்தியாவில் உள்ள 50 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் காவல்துறை விசாரணையில் அவை அனைத்தும் புரளி என தெரிய வந்தது. இந்தநிலையில் தற்போது மும்பையில் 50க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு ஒரே நேரத்தில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஜஸ்லோக், ரஹேஜா, செவன் ஹில் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு ஈமெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. முதற்கட்ட தகவல் படி மருத்துவமனையின் படுக்கைகள், குளியலறைகளில் வெடிகுண்டு உள்ளதாக சைப்ரஸ் நாட்டிலிருந்து வெடிகுண்டு விரட்டில் வந்திருப்பதாகவும், மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் குறித்து விசாரித்து வருவதாகவும் மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.