Advertisment

மின் இணைப்பை மாற்ற லஞ்சம்; கையும் களவுமாக சிக்கிய உதவி செயற்பொறியாளர்

trichy tennur tneb office assistant engineer rajesh bribe incident 

திருச்சி மாவட்டம் மேலச்சிந்தாமணியைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரது மகன் வெங்கடேசன் (வயது 45) இவர் கட்டட கட்டுமானதொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது நண்பர் பாலு என்பவருக்கு ஸ்ரீரங்கம் வட்டம் கம்பரசம்பேட்டை கிராமத்தில்உள்ள ஜெயராம் நகரில் ஒப்பந்த அடிப்படையில் வீடு கட்டிக் கொடுத்துள்ளார். அந்த வீட்டிற்கு குடியிருப்புக்கான மின் வசதியும்பெற்றுக் கொடுத்துள்ளார். பிறகு பாலு அந்த குடியிருப்பினை வியாபார தளங்களுக்கு வாடகைக்கு விட நினைத்து குடியிருப்புக்காக பெற்ற மின் இணைப்பினை வணிக பயன்பாட்டிற்கு மாற்றித்தரும்படி வெங்கடேசனிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisment

அதன் பேரில் காண்ட்ராக்டர் வெங்கடேசன், கடந்த ஜனவரி மாதத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை திருச்சி தென்னூர் மின்வாரிய அலுவலகத்தில் உள்ள சிந்தாமணி பிரிவில் கொடுத்துள்ளார். விண்ணப்பம் அளித்து மூன்று மாதங்களாக எந்த நடவடிக்கையும் இல்லாததால் காண்ட்ராக்டர் வெங்கடேசன் சம்பந்தப்பட்ட சிந்தாமணி பிரிவுக்கான உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் என்பவரை கடந்த 17 ஆம் தேதி காலை சந்தித்துதனது விண்ணப்பத்தின் நிலை குறித்து கேட்டுள்ளார். அதற்கு உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் இருபதாயிரம் லஞ்சமாக கொடுத்தால் மின் இணைப்பின் பயன்பாட்டு வகையைமாற்றம் செய்து தருவதாகக் கூறியுள்ளார். இதன்பின் வெங்கடேசன் கேட்டுக் கொண்டதன் பேரில் ஐயாயிரம் ரூபாய் குறைத்துக் கொண்ட உதவி பொறியாளர் ராஜேஷ் 15 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே மின் இணைப்பு மாற்றம் செய்து தர இயலும் என்று கட்டாயமாகக் கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத வெங்கடேசன், இதுகுறித்து திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையின் காவல்துறை கண்காணிப்பாளர் மணிகண்டனிடம் நேரில்சென்று புகார் அளித்துள்ளார். வெங்கடேசன் அளித்தபுகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆலோசனையின் பேரில், இன்று (20/4/2023) காலை 11 மணியளவில் வெங்கடேசனிடம் இருந்து உதவி பொறியாளர் ராஜேஷ் 15,000 லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கையும் களவுமாகப் பிடிபட்டார். மேலும் மின்சார வாரியத்தில் வீட்டுப் பயன்பாட்டு மின் இணைப்பில் இருந்து வணிக மின் இணைப்பாகமாற்றம் செய்வதற்குஅரசு நிர்ணயித்துள்ள கட்டணம் 400 ரூபாய்மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

police Bribe Electricity trichy TANGEDCO tneb
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe