trichy tamilnadu minister valarmathi son marriage function

திருச்சியில் அமைச்சர் வளர்மதி ஏற்கனவே தன்னுயை மூத்த மகன் திருமணத்தை மிகப்பிரம்மாண்டமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடத்தினார். அதே போன்று தன்னுடைய இரண்டாவது மகன் திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்தார்.

Advertisment

திருச்சியில் குணசீலம் ஸ்ரீ பிரன்ன வெங்கடாசலதி பெருமாள் திருக்கோவிலில் அதிமுக அமைப்புச் செயலாளரும், தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான வளர்மதி இளைய மகன் ஹரிராம், மணமகள் சூரியபிரபா ஆகியோரின் திருமணம் கடந்த 4,5 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. ஊரடங்கு தொடர்ந்து நீடிப்பதால் அமைச்சர் வேறு வழி இல்லாமல் இன்று (06/05/2020) குணசீலம் பொருமாள் கோவிலில் திருமணத்தை நடத்தி முடித்தார்.

Advertisment

இந்தத் திருமண நிகழ்ச்சியில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குடும்ப உறவுகள் மட்டும் வந்திருந்தனர். அவர்களுக்குமுகக் கவசமும், கைகளைக் கழுவுவதற்கு கிருமிநாசினிகளும்கொடுக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் திருச்சி அதிமுக மாவட்டச் செயலாளர் குமார், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, ஆவின் சேர்மன் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Advertisment