Trichy suriyur jallikattu started

Advertisment

தமிழக வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, பொங்கல் பண்டியையொட்டி மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் நடைபெறும். அதன்படி ஏற்கனவே மதுரை பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்துமுடிந்துவிட்டது. இந்நிலையில் இன்று (20.01.2021)திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது.

எப்போதும் ஜனவரி 15ஆம் தேதி நடக்கும் திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டி, இந்த ஆண்டு கன மழையின் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. அந்த ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. இப்போட்டியை வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் தொடங்கிவைத்தார்.

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள் களமிறங்குகின்றன. அதேபோல் 300 மாடுபிடி வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்கிறார்கள்.