திருச்சி என்கவுண்டர்; தாக்கப்பட்ட எஸ்.ஐக்கு மருத்துவமனையில் சிகிச்சை

Trichy sub inspector who was treated at the hospital for rowdy jagan issue

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெகன்(எ) கொம்பன் ஜெகன்(30). ரவுடியான இவர் மீது கொலை வழக்கு, கூலிப்படையாக செயல்பட்டது, அடிதடி உள்ளிட்டபல்வேறு வழக்குகள் நிலுவையில்உள்ளது. கடந்த மே 19 ஆம் தேதி அன்று ஜெகன் பிறந்தநாள் விழா கொண்டாடுவதற்காக இவரது வீட்டில் கூட்டாளிகளுக்கு கறி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு,அதில் இவரது கூட்டாளிகள் 9 பேர் பட்டா கத்தி, அரிவாள் என ஆயுதங்களுடன் வந்து கலந்து கொண்ட. அனைவரையும் திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் இன்று திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள சனமங்கலம் என்ற பகுதியில் கொம்பன் என்கின்ற ஜெகனை போலீசார் பிடிக்க முயன்ற பொழுது எஸ். ஐ வினோத்தை தாக்கிவிட்டு அவர்தப்பி ஓட முயன்றதாக கூறப்படுகிறது.இதனால் போலீசார் ஜெகனைஎன்கவுண்டர் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரின் உடல் பிரேதபரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. என்கவுண்டர் சம்பவத்தில் காயம் அடைந்த உதவி ஆய்வாளர் வினோத் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ரவுடி ஜெகன் மீது கொலை உள்ளிட்ட11 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

police rowdy trichy
இதையும் படியுங்கள்
Subscribe