Advertisment

திருச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை - காவல்துறையினர் விசாரணை!

Trichy student harassed - Police investigate

Advertisment

திருச்சிபுத்தூர்வண்ணாரப்பேட்டையில் தனியார் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தாளாளராக ஜேம்ஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அப்பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அம்மாணவி திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் திருச்சி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மீராபாய் விசாரணை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கரூரில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கு முடிவதற்குள் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் அதிகமாக அரங்கேறுவது பல்வேறு தரப்பினருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

sexual harassment school girl trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe