/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01 art img police siren 1_60.jpg)
வெளிநாட்டில் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் காந்தி ரோடு பகுதியில் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் ஒரு தனியார் ஏஜென்சி செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளராக மீனாட்சி என்பவர் உள்ளார். மேலாளராக பாலகிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர்கள் இருவரும் சிவகங்கை மாவட்டம் கட்டாணிப்பட்டி பெரிய கோட்டைப்பட்டி பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி (வயது 39) மற்றும் அவரது உறவினர்கள் ஆதித்யன், அகஸ்டின், ஜெயக்குமார், முத்துராமலிங்கம் ஆகிய நான்கு பேரிடம் போலந்து நாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி மொத்தம் 9 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்று உறுதி அளித்தபடிவேலை பெற்றுத்தராமல்மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பார்த்தசாரதி கொடுத்த புகாரின் பேரில் உரிமையாளர் மீனாட்சி மற்றும் மேலாளர் பாலகிருஷ்ணன் ஆகிய இருவர் மீதும் ஸ்ரீரங்கம் போலீசார் மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow Us