/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01 art img police siren 1_50.jpg)
திருச்சியில் கல்லூரிமாணவி ஒருவர் காணாமல் போனது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு ஜெ.ஜெ. நகர் புதுக்கோட்டை மெயின் ரோடு பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் வசித்து வருகின்றனர். இந்த முகாமைச் சேர்ந்த ஒரு மாணவி திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி அந்த மாணவி அருகில் உள்ள ஒரு கடைக்கு செல்வதாக கூறிச் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
பெற்றோர்பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர். இருப்பினும் மாணவி குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் கே.கே. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow Us