/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01 art img police siren 1_56.jpg)
திருச்சி தெற்கு காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் மேகநாதன் (வயது33).இவருக்கும் திருவெறும்பூர் பர்மா காலனி திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (வயது 30) என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புதிருமணம் நடைபெற்றது.தற்போது 5 மாத கர்ப்பமாக உள்ளார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கணவர் மேகநாதன், மாமியார் ராதா ஆகியோர் மாரியம்மாளை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தி வந்ததாகத்தெரிகிறது. இதுபற்றியதகவல் அறிந்த மாரியம்மாளின் பெற்றோர், அவர்களிடம்இதுகுறித்துகேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மேகநாதன், ராதா ஆகியோர் கர்ப்பிணிப் பெண் மாரியம்மாளை அடித்து விரட்டியதாகக் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாரியம்மாள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவர் வீட்டிலிருந்து தப்பி தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். பின்னர்திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார், கணவர் மேகநாதன், மாமியார் ராதா ஆகியோர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow Us