Advertisment

திருச்சியில் கஞ்சா கும்பல் கொலைவெறி தாக்குதல்...ஒருவர் கொலை!

கடந்த செப்டம்பர்- 6 ஆம் தேதி காஜாப்பேட்டை பெல்ஸ் கிரவுண்ட் பகுதியில் கஞ்சா போதையில் இருந்த கும்பல் ஒன்று, அந்த பகுதியில் உள்ள வீட்டிற்குள் நுழைந்து செல்போனை திருட முயற்சித்தது. அப்போது வீட்டில் இருந்தவர்களும் அருகில் இருந்த பொதுமக்களும் கும்பலை பிடித்து, அடித்து கண்டித்து அனுப்பியுள்ளனர்.

Advertisment

நள்ளிரவில் செல்போன் திருட வந்த கஞ்சா கும்பலை அடித்து விரட்டப்பட்ட நிலையில், அடுத்த நாள் காலை வீட்டிற்குள் புகுந்த கும்பல் வீட்டினுள் இருந்தவர்களை கொடூமான ஆயுதங்களால் தாக்கிவிட்டு மறைந்து சென்றனர். கஞ்சா கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்த காமராஜ் (45) என்பவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

TRICHY SOME GANG ENTIRE AT HOME AND THIEF TAKE MOBILE POLICE INVESTIGATION

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அனைவரும் அரசமரம் பெல்ஸ் கிரவுண்ட அருகே சாலை மறியலில் ஈடுபட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்ணாவில் ஈடுபட்டனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காமராஜ் சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் காமராஜின் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, இதற்கு காரணமான விமல்ராஜ்(21), விஜயபாபு(22) ஆகியோரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர்.

Advertisment

TRICHY SOME GANG ENTIRE AT HOME AND THIEF TAKE MOBILE POLICE INVESTIGATION

இறந்த கூலித்தொழிலாளி காமராஜிக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். காமராஜ் ஒருவர் வருமானத்தில் ஓடிக்கொண்டிருந்த குடும்பம், இப்போது ஆதரவு அளிக்க ஆளின்றி தவித்து வருகிறது. எனவே இறந்த காமராஜ் குடும்பத்திற்கும், அக்குழந்தைகளுக்கும் படிப்பு உள்ளிட்டவற்றிற்கு மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண்டி அப்பகுதிமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

TRICHY SOME GANG ENTIRE AT HOME AND THIEF TAKE MOBILE POLICE INVESTIGATION

இந்தியாவிலே திருச்சி பாலக்கரை பகுதியில் தான் கஞ்சா அதிகம் விற்பனை ஆகுறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதன் காரணமாக ஏராளமான இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இது தொடர்பாக பிரமதர் அலுவலகத்தில் புகார் சென்றதும். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் இந்த பிரச்சனையில் காவல்துறை சீரியஸாக நடவடிக்கை எடுக்காமல், அலட்சிய போக்கினால் கஞ்சா கும்பல் கொலை வெறி தாக்குதலில் காமராஜ் இறந்துவிட்டார். இனி வரும் காலங்களில் இன்னொரு காமராஜ் இறக்கக்கூடாது என்று காவல்துறை கடும் உடனடிநடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்

peoples shocked Police investigation THIEF TAKE MOBILE GANG ENTIRE AT HOME trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe