Advertisment

ஸ்மார்ட் சிட்டி திட்ட பைப்புகள் திருட்டு; இருவர் கைது

trichy smart city scheme pipe issue

Advertisment

திருச்சி மாநகரில்ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறுவளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. இதில் ஒரு தனியார் நிறுவனம் மூலம் தில்லை நகர் பத்தாவது கிராஸ்பகுதியில் பணிகள் நடந்து வருகிறது.

இந்த திட்ட பணிகளுக்காக பல லட்சம் மதிப்புள்ள பைப்புகள் அங்கு வைக்கப்பட்டிருந்தன. அந்த பைப்புகளை அங்குஎஞ்சினீயராக மற்றும்சூப்பர்வைசராக பணிபுரியும் சென்னையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், திருச்சி கருமண்டபத்தை சேர்ந்த கண்ணன் ஆகியோர் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தனியார் நிறுவனத்தின் மேலாளர் சதீஷ்குமார் தில்லை நகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரத்தினவள்ளி வழக்கு பதிந்து பாலகிருஷ்ணன், கண்ணன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். அவர்களிடமிருந்து ரூ. 13 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள பைப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.

police trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe