Advertisment

திருச்சி ஸ்மார்ட் சிட்டியா? சாக்கடை சிட்டியா?

திருச்சி மாநகரில் நேற்றுகாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்தது. இதனால் ஓரளவு வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisment

திருச்சி மாவட்டத்தில் கோடை காலத்துக்கு பிறகு கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அக்னி நட்சத்திரம் போன்று திருச்சியில் 2 வாரமாக வெயில் 100 டிகிரியை தாண்டியது. இந்த வெயிலின் தாக்கத்திலிருந்து எப்படி தப்பிக்க போகிறோம் என்று பொதுமக்கள் ஒருவித அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேக மூட்டத்தோடு இருந்தது

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இந்நிலையில் நேற்றுகாலையில் திடீரென கருமேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீச துவங்கியது. சிறிது நேரத்தில் திருச்சி மாநகர், மாவட்டம் முழுவதும் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை அரை மணி நேரம் தொடர்ந்தது.

அதன்பிறகு சாரல் மழை பெய்தது. இதனால் பூமி குளிர்ந்தது. இந்த திடீர் மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் தேங்கிய மழைநீரில் வாகனங்கள் தத்தளித்து செல்ல வேண்டிய நிலைக்கு சென்றனர்.

திருச்சி மாநகரின் மிக முக்கியமான வியாபார மையங்கள் இருக்கும் தில்லைநகரின் 11 கிராஸ்களிலும் மழை தண்ணீர் சக்கடை தண்ணீராக ஆறு போல ஓடிக்கொண்டிருந்தது. இதே நிலைதான் சத்திரம் பேருந்து நிலையம் கடைவீதிகள் முழுவம் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது.

திருச்சி இந்தியாவின் தூய்மை நகர பட்டியில் இடம் பெற்ற நாளிலிருந்து குப்பைகளை கொட்டாதீர், கொட்டினால் அபராதம் என்று தினமும் பிரச்சாரம் செய்யும் திருச்சி மாநகராட்சி பாதாள சாக்கடைகள் எதையும் சரிவர செய்யாமல் இருப்பதே இந்த நிலைக்கு காரணம். இதேபோல ஸ்மார்ட் சிட்டி நிகழ்ச்சி என்று ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கில் செலவு கணக்கு மட்டுமே காண்பிக்கிறார்கள் என்பதும்,அரை மணிநேர மழைக்கே திருச்சி மாநகர் சாக்கடை தண்ணீரால் சூழ்ந்து இருப்பது வேதனையளிக்கிறது.

அடுத்த ஸ்மார்ட் சிட்டிற்கு தற்போது 1000 கோடி பணம் வரபோகிற நிலையில் இதன் கமிஷன் தொகையை பிரித்து கொள்வதற்கு அதிகாரிகளும், அமைச்சர்களும் சண்டை போட்டுக்கொண்டிருக்கும் இவர்கள் திருச்சியினை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கு சண்டைபோட்டு வேலைசெய்ய வேண்டும் என்பதே திருச்சி மக்களின் விருப்பம்.

smartcity rain thiruchy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe