Skip to main content

அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய இன்ஸ்பெக்டர்; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 28/03/2023 | Edited on 28/03/2023

 

trichy siruganur police inspector incident court judgement 

 

திருச்சி மாவட்டம், பெரகம்பியைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன் என்பவர் மீதான அடிதடி வழக்கில் சிறைக்கு அனுப்பாமல் குற்றத்தை குறைத்து பதிவு செய்து காவல் நிலைய பிணையில் விடுவிக்க லஞ்சமாக 6000 ரூபாய் கேட்டது தொடர்பாக கடந்த 01.11.2006 அன்று அப்போதைய சிறுகனூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் செல்வராஜ் என்பவர் மீது திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். வழக்கானது திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

 

விசாரணை முடிவுற்று இன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் வழங்கிய தீர்ப்பில், முன்னாள் காவல் ஆய்வாளர் செல்வராஜ் லஞ்சப் பணம் கேட்டுப் பெற்ற குற்றத்திற்காக ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதமும், அபராதத்தைக் கட்டத் தவறினால் 6 மாதங்கள் சிறை தண்டனையும் மற்றும் அரசு பதவியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றத்திற்காக ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 6 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்ததோடு மேற்கண்ட தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

 

இவ்வழக்கில் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் பிரசன்ன வெங்கடேஷ் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை பொறிவைத்து பிடித்தும், முன்னாள் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு அம்பிகாபதி புலன் விசாரணை செய்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியும் மற்றும் ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்ற அரசு சிறப்பு வழக்குரைஞர்  சுரேஷ்குமார் திறம்பட வழக்கை நடத்தியும் குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்துள்ளார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மது போதையில் போலீசார் மீது தாக்குதல்; வைரலாகும் வீடியோ

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
Alcoholic attack on police; video goes viral

அதீத மதுபோதையில் இளைஞர் ஒருவர் போலீசாரை தாக்கும் வீடியோ காட்சிகள் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை தாம்பரம் அடுத்துள்ள மாடம்பாக்கம் பிரதான சாலை பகுதியில் அமைந்துள்ளது நூற்றாஞ்சேரி. இந்த பகுதியில் உள்ள ஜோதி நகர் என்ற இடத்தில் நேற்று இரவு மதுபோதையில் உணவகத்திற்கு சென்ற இளைஞர் ஒருவர் உணவகத்திலேயே மது அருந்தியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து உணவகத்தில் ஆம்லெட் கேட்டுள்ளார். உணவக ஊழியர்கள் ஆம்லெட் தராததால் ஆத்திரமடைந்த போதை நபர் மாடம்பாக்கம் பிரதான சாலையில் உருண்டு புரண்டு அட்ராசிட்டி செய்தார். 

இளைஞர் ஒருவர் மது போதையில் நடு சாலையில் அமர்ந்திருப்பது குறித்து தகவலறிந்து அங்கு வந்து சேலையூர் காவல் நிலைய இரவு நேர காவலர் கந்தன் அவரை அப்புறப்படுத்த முயன்றபோது காவலரை காலால் தாக்கி போதை இளைஞர் அட்டகாசம் செய்யும் வீடியோ காட்சிகள் தற்பொழுது இணையத்தில் விரல் ஆக்கி வருகிறது.

Next Story

சிறுமிகளை திருமணம் செய்த வாலிபர்கள் போக்சோவில் கைது

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
nn

கோபிசெட்டிபாளையம் அருகே சிறுமிகளை திருமணம் செய்து கர்ப்பிணிகளாக்கிய வாலிபர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கல்லாங்குளம் காலனி நல்லாம்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் சிறுமியை ஒருவரை திருமணம் செய்து குடும்பம் நடத்துவதாக கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறை ஊர் நல அலுவலராக பணிபுரியும் கிருஷ்ணவேணி என்பவர் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கார்த்திகேயன் சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்துவது உறுதி செய்யப்பட்டது. மேலும் அந்த சிறுமி தற்போது மூன்று மாத கர்ப்பமாக இருப்பதும் தெரிய வந்தது.

இதனையடுத்து கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசார் கார்த்திகேயன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோல் கோபியை சேர்ந்த ஆசிப் (28) என்பவரும் சிறுமியை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவதாக சமூக நலத்துறை ஊர்நல அலுவலர் கிருஷ்ணவேணி கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் ஆசிப் சிறுமியை திருமணம் செய்தது உறுதி செய்யப்பட்டது. தற்போது அந்த சிறுமி 3 மாத கர்ப்பிணியாக இருப்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசார் ஆசிப் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.