/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01 art img police siren 1_14.jpg)
திருச்சி கள்ளர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மகன் சக்திவேல் (வயது 22). இவர் அதே பகுதியில் பிரிண்டர்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று, கடையைப் பூட்டி விட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டார். இந்த நிலையில் மர்ம ஆசாமிகள் சிலர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை திருடிக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர். இதுகுறித்து சக்திவேல் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இதேபோன்று திருச்சிகணபதி நகரைச் சேர்ந்தவர் முகமது சூரக் (வயது 47). இவர் இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று, கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டார். இந்த நிலையில் மர்ம ஆசாமிகள் யாரோ கடையில் இருந்த காப்பர் வயர் மற்றும் இரும்பு தட்டுகள் சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து முகமது சூரக் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கண்ட இரண்டு கடைகளில் மொத்தம் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடு போய் உள்ளன.
இச்சம்பவங்கள் திருச்சி பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Follow Us