/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/trichy-school-art.jpg)
மக்கள் சக்தி இயக்கம் மற்றும் செந்தண்ணீர்புரம் கல்வி வளர்ச்சி பணி குழு சார்பாக திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்கான பேரணி இன்று (28.04.2023) காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.
இந்த பேரணியானது மக்கள் சக்தி இயக்க மாவட்டச் செயலாளர் ஆர்.இளங்கோ தலைமையில்உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் எழிலரசி, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை தனலட்சுமிஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம் வரவேற்றார். மாநகராட்சி 35வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுரேஷ், வட்டாரக் கல்வி அலுவலர் ஜெயராமன் ஆகியோர் சிறப்புரையாற்றி பேரணியை தொடங்கி வைத்தார்கள்.
மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. எண்ணும் எழுத்தும் கற்பித்தல் முறை, மன்ற செயல்பாடுகள்,காலை உணவு, சத்துணவுடன் வாரம் 5 முட்டை வழங்குதல், அரசுப் பள்ளிகளில் தரமான இலவசக் கல்வி வழங்கப்படுவதை பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் இந்த ஊர்வலம் நடத்தப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள், மக்கள் சக்தி இயக்க பண்பாளர்கள், பள்ளியில்படிக்கும் மாணவர்களின்பெற்றோர்கள், பொதுமக்கள் மாணவ, மாணவிகள் அனைவரும் பள்ளியின் உள்ள சிறப்பம்சங்கள் அடங்கிய பதாகை ஏந்தி மாநகராட்சி பள்ளியில்சேர்க்க வலியுறுத்தி செந்தண்ணீர்புரம் பகுதி வீதிகளில் ஊர்வலமாக வந்தார்கள்.
இதில் பள்ளியின் சிறப்பம்சங்கள் அடங்கிய பிரசுரங்கள்வீடுகள்தோறும் வழங்கப்பட்டது. மேலும், பேரணியில்ஆட்டோ மூலமும் பிரச்சாரம்செய்யப்பட்டுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. பேரணியில் பள்ளி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி விஜயகுமார், சுப்புராஜ், மக்கள் சக்தி இயக்க நிர்வாகிகள் விஜயகுமார்,ஆர்.கே.ராஜா, சுந்தர், கல்வி வளர்ச்சி பணி குழு பண்பாளர்கள், உயர்நிலைப்பள்ளிமற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர்மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)