s

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் திருச்சியில் கிறிஸ்துமஸ் விழா இன்று திருச்சியில் கொண்டாடப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்றே திருச்சிக்கு வந்திருந்தார் மு.க.ஸ்டாலின்.

Advertisment

இன்று தி.மு.க. இலக்கிய வெளியிட்டு செயலாளர் தலைவர் திருச்சி என்.செல்வேந்தின் உடல்நிலை சுகவீனமாக இருக்கிறார் என்பதை அறிந்ததும். சீனிவாசநகரில் உள்ள அவருடைய வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தார். உடன் கே.என்.நேரு, பொன்முடி, அன்பில்மகேஷ் ஆகியோரும் சென்றனர்.

Advertisment

என்.செல்வேந்திரனிடம் எப்படி இருக்கீங்க, டிவி, பத்திரிக்கை எல்லாம் படிக்கிறீங்களா? என்று ஸ்டாலின் கேட்க, உடன் அவர் அமைதியாக இருந்திருக்கிறார். உங்க வயசு என்ன என்று கேட்டதும், குறைத்து சொல்லியிருக்கிறார். உடன் இருந்த கே.என்.நேரு என்னய்யா என்னோட வயச சொல்றீங்க.. அப்பா வயசை சொல்லுப்பா என்று செல்வேந்திரன் மகன் எழிலிடம் சொல்ல, உடனே அப்பாவுக்கு 79வயது என்று சொல்ல. ...உடனே ஸ்டாலின், அப்பாவுக்கு ஞாபக மறதி பிரச்சனையிருக்கா என்று கேட்க, உடனே மகன் எழில்.. இல்ல தளபதி கொஞ்சம் கொஞ்சம் மறந்திடுவார். மத்தப்படி பிரச்சனை இல்லை என்று சொன்னார்.

ஸ்டாலின், ‘ ஏற்கனவே இரண்டு முறை திருச்சிக்கு வந்திருந்தேன். அப்பவே உங்களே பாக்கணும்னு நினைச்சேன். பாக்க முடியல’ என்று சொல்லிட்டு உடம்பை பாத்துக்கோங்க என்று ஆறுதல் சொல்லிட்டு சென்றார்.

Advertisment