Advertisment

சிறுவனுக்கு பாலியல் தொல்லை; பள்ளி ஆசிரியை போக்சோவில் கைது    

Trichy school teacher arrested in POCSO

திருச்சி மாவட்டம் துறையூரில் தனியார் பள்ளி ஆசிரியையிடம் டியூசன் பயில வந்த 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆசிரியை போக்சோ வழக்கில் கைது. துறையூர் அருகே உள்ள வலையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவி (43). துறையூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். தற்போது சித்திரப்பட்டி பகுதியில் தங்கி இருந்து டியூஷன் எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. அதே பள்ளியில் படிக்கும் துறையூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆசிரியை தேவியிடம் டியூசன் சென்று வருவதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 27 ஆம் தேதி அன்று 16 வயது சிறுவனுக்கு ஆசிரியை பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.இது குறித்துசிறுவன் தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து முசிறிஅனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் தேவிமீது மாணவனின் பெற்றோர் புகார் அளித்தனர்.அந்த புகாரின் அடிப்படையில் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஆசிரியை தேவியை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

Advertisment

arrested POCSO teacher
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe