Advertisment

தொலைநோக்கி மூலம் கோள்களைக் கண்டுகளித்த மாணவர்கள் 

trichy school students seen planets via telescope 

Advertisment

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மணக்காலில் உள்ள தென் போஸ்கோ உயர்நிலைப் பள்ளியில் வானில் உள்ள கோள்களை தொலைநோக்கி மூலம் மாணவ மாணவிகள் காணும் வகையில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சியில் 500-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் குழந்தைகள் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வானில் உள்ள கோள்களை தொலைநோக்கி மூலம் பார்த்து ரசித்தனர். இந்நிகழ்ச்சி நேற்று மாலை ஆறு மணி முதல் 9 மணி வரை நடைபெற்றது.

வானில் உள்ள கோள்கள் பூமிக்கு அருகில் வருகின்ற காட்சிகளை தொலைநோக்கி வழியாக நான்கு கோள்களை பார்க்க முடியும் என எதிர்பார்த்த நிலையில் கூடுதலாக ஒரு கோள் ஐந்தாவதாக காட்சியளித்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வைமணக்காலில் உள்ள தென்போஸ்கோ உயர்நிலைப் பள்ளியில் லால்குடி இயற்கை விழுதுகள், என் எம் சி அஸ்ட்ரோ கிளப் திருச்சி அஸ்ட்ரோ கிளப்,மற்றும் சங்கம் சில்க்ஸ் இணைந்து லால்குடியில் முதன்முறையாக வானில் உள்ள கோள்களை தொலைநோக்கி வழியாக காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

telescope trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe