Advertisment

எங்களுடைய கல்வியை உறுதிப்படுத்துங்கள்! - நரிக்குறவர் சமூகம் கோரிக்கை!

Advertisment

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நரிக்குறவர்கள் 300 க்கும் மேற்பட்டோர், தங்களுடைய அடிப்படை உரிமையான கல்வியை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

திருச்சி - தஞ்சை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள, தேவராய நேரி பகுதி, நரிக்குறவர் சமூகத்திற்காக ஒதுக்கப்பட்டு, அவர்களுக்கு 80 லட்சம் ரூபாய் செலவில் பள்ளிக் கட்டிடம் கட்டித்தரப்பட்டது. அதில் நரிக்குறவர்கள் நலப் பாதுகாப்புச் சங்கம், 'திருவள்ளுவர் குருகுல கல்வி'யை நரிக்குறவ சமூக மாணவ மாணவிகளுக்கு வழங்கிவந்தது.

தற்போது, குருகுலம் மூடப்பட்ட நிலையில், அதனை மீண்டும் திறந்து தங்களுடைய கல்வியை அரசு உறுதி செய்யவேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

school trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe