trichy sbi headquarters nearest bakery fire incident 

திருச்சி பாரதியார் சாலை ஸ்டேட் பேங்க் தலைமை அலுவலகம் அருகே வின்சென்ட் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பேக்கரி முன்பு வாடிக்கையாளர்கள் அமர வசதியாக கீற்றுக் கொட்டகை அமைக்கப்பட்டது. இந்த கீற்றுக் கொட்டகையில் இன்று (07.04.2023) காலை 6 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

Advertisment

இதுகுறித்து அக்கம் பக்கத்து கடைக்காரர்கள் கொடுத்த தகவலின் பேரில் திருச்சி தீயணைப்பு நிலையஅலுவலர் மனோகர் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து தண்ணீரை அடித்து தீயை அணைத்தனர். மேலும் இந்தக் கடை அருகே பெரிய வணிக வளாகம் அமைந்துள்ளது. தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து தீயை அணைத்த காரணத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Advertisment

உரிய நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்ததால் கீற்றுக் கொட்டகையைத்தவிர வேறு எங்கும் தீ பரவவில்லை. விபத்துக்கான காரணம் உடனடியாகத்தெரியவில்லை. இருப்பினும் முதல் தளத்தில் நின்று யாரேனும் புகைப் பிடித்துவிட்டு தீயை அணைக்காமல் விட்டுச் சென்றிருக்கலாம் அதனால் இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த தீ விபத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.