/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01 art img police siren 1_1.jpg)
உணவு விடுதியில் காரை நிறுத்திவிட்டு உணவு அருந்தச் சென்ற போது, காரில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் திருச்சியில்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி (வயது 34). இவர் நேற்று குடும்பத்துடன் மதுரையில் இருந்து பாண்டிச்சேரிக்கு காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கரியமாணிக்கம் பிரிவு சாலையில் உள்ள ஒரு தனியார் உணவு விடுதிக்கு உணவு அருந்தச் சென்றனர். அப்போது இரண்டு மோட்டார் பைக்கில் அங்கு வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்றுகாரின் கண்ணாடியை உடைத்து காரின் உள்ளே கைப்பையில் இருந்த 65 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 13 கிராம் தங்க நகை, 50 கிராம் வெள்ளி, 62,000 ரூபாய் ரொக்கம் என 1 லட்சத்து 32 ஆயிரம்மதிப்புள்ள நகை மற்றும்பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
மேலும், கொள்ளையர்கள் பயன்படுத்திய வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லாததால் அது திருட்டு வாகனம் எனத்தெரிய வந்தது. இதுகுறித்து சமயபுரம் காவல்நிலையத்தில் ரேவதி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் பணம் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசித்தேடி வருகின்றனர்.
Follow Us