பல்வேறு கொலை, கொள்ளை, அடிதடி வழக்கில் தொடர்புடையவர் பிரபல ரவுடி பிரவீன்குமார். நம்பர் 1 டோல்கேட் பகுதி, அரசு மதுபான கடை எதிரே முன்விரோதம் காரணமாக பிரவீன் குமாரை ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களால் தலையில் அடித்ததில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
டோல்கேட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துபிரவீன்குமார் உடலைக் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.8 வருடங்களுக்கு முன்பு நடந்த கொலைக்குப் பழிக்குப்பழியாக இக்கொலை நடந்திருக்கலாம், பீரங்கிமேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக், கவுதம் உள்ளிட்ட 5 பேர் இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.